இரண்டாவது நாளாக தொடரும் புரபஷனல் கூரியர் நிறுவன அலுவலகத்தில் வருமான வரி சோதனை...

இரண்டாவது நாளாக தொடரும் புரபஷனல் கூரியர் நிறுவன அலுவலகத்தில் வருமான வரி சோதனை...


income-tax-raid-for-professional-courier

பிரபல கூரியர் நிறுவனமான புரபஷனல் கூரியர் நிறுவனம் அரசுக்கு சரியாக வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்து வருவதாக தகவல் வெளியானதை அடுத்து நேற்று முதல் வருமான வரி சோதனை நடைப்பெற்று வருகிறது. 

இந்தியா, துபாய், அமெரிக்கா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் சுமார் 3500 இடங்களில் புரபஷனல் கூரியர் நிறுவனம் செயல் பட்டு வருகிறது. சென்னையில் நுங்கம்பாக்கத்தின் இந்நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. இந்நிறுவனத்தின் செயல்பாடுகளை வருமான வரித்துறையினர் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

Professional courier

இந்நிலையில் திடீரென நேற்று தமிழகம் மற்றும் ஐதராபாத்தில் உள்ள புரபஷனல் நிறுவனத்துக்கு சொந்தமான 30 க்கும் மேற்பட்ட கிளைகளில் நேற்று இரவு வரை வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர். 

இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் புரபஷனல் கூரியர் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை நடந்து வருகிறது. சோதனை முழுமையாக முடிந்த பின்பே வரி ஏய்ப்பு எவ்வளவு நடந்துள்ளது என்பது தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.