சகோதரியுடன் கள்ளக்காதல் வைத்திருந்த ரௌடியை சரமாரியாக வெட்டிக்கொண்ட சகோதரர்; திருச்சியில் சம்பவம்.!
திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர், பனையக்குறிச்சி பகுதியில் வசித்து வருபவர் சுந்தர்ராஜ். இவர் அப்பகுதியில் பிரபல ரௌடியாக சுற்றிவரும் நிலையில், பல்வேறு காவல் நிலையங்களில் இவரின் மீது வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.
ரௌடி சடலமாக மீட்பு
இதனிடையே, இன்று அவர் தனது வீட்டின் மாடியில் சடலமாக, வெட்டிக்கொலை செய்யப்பட்டவாறு இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரியவந்தது. இதனையடுத்து, நிகழ்விடத்திற்கு விரைந்த காவல்துறையினர், சுந்தர்ராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை முன்னெடுத்தனர்.
இதையும் படிங்க: #Breaking: திமுக பிரமுகர் அடித்துக் கொலை?.. இரத்த வெள்ளத்துடன் மீட்கப்பட்ட சடலம்.. குடும்பத்தினர் சோகம்.!
கள்ளகாதலால் சம்பவம்
விசாரணையில், சுந்தர்ராஜூக்கு பரிமளா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் பின்னாளில் தகாத உறவில் இருந்து வந்துள்ளனர். இந்த விஷயம் பரிமளாவின் சகோதரர் கணேசமூர்த்தி என்பவருக்கு தெரியவந்துள்ளது.
அவர் ரௌடியான சுந்தரராஜை கண்டித்தும் கேட்காத நிலையில், ஆத்திரத்தில் மூன்று பேர் கும்பலுடன் சேர்ந்து ரௌடி சுந்தரராஜை வெட்டிக்கொலை செய்துள்ளார். இந்த விஷயத்தை கண்டறிந்த அதிகாரிகள், கணேசமூர்த்தி உட்பட 3 பேர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: கொடூரத்தின் உச்சம்... ஆசைக்கு இணங்க மறுத்த மனைவி... பிளேடால் வெட்டிய 67 வயது கணவன்.!!