வீரியம் குறையாத கொரோனா.. ஒரே நாளில் 600.. தமிழகத்தில் 6000-யை தாண்டிய பாதிப்பு!in tn corono positive exceeds 6000

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் 600 பேர் பாதிக்கப்பட்டு மொத்த பாதிப்பு 6009 ஆக உயர்ந்துள்ளது. இன்று 3 பேர் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்பு 40 ஆக அதிகரித்துள்ளது.

உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனா பல்வேறு நாடுகளில் உச்சத்தை தொட்டுவிட்டு தற்போது பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போது தான் படிப்படியாக உயர்ந்து வருகிறது.

Coronovirus

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தினமும் 500 க்கும் மேற்பட்ட பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இன்று மட்டும் தமிழகத்தில் 600 கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதன் மூலம் தமிழகத்தில் மொத்த பாதிப்பு 6009 ஆக அதிகரித்துள்ளது.

இன்றும் வழக்கம்போல சென்னையில் அதிகபட்சமாக 399 பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அடுத்ததாக திருவள்ளூரில் 75 , கடலூரில் 34 என பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மேலும் இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், மதுரை, காஞ்சிபுரம், திருநெல்வேலி, திருவண்ணாமலை, திருச்சி, தேனி, தென்காசி, விருதுநகர், கன்னியாகுமாரி, ராமநாதபுரம், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.