BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
Tiruvannamalai: நர்சிங் கல்லூரி மாணவியிடம் அத்துமீறல்; 20 வயது இளைஞர் போக்ஸோவில் கைது.!
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி பகுதியில் இருக்கும் கிராமத்தில், 17 வயதுடைய சிறுமி வசித்து வருகிறார். இவர் அங்குள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். இவரின் உடல்நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதை கவனித்த சிறுமியின் தாய், கடந்த பிப். 09 அன்று மகளை திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு சிறுமிக்கு நடந்த பரிசோதனையில், அவர் கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைக்கேட்டு அதிர்ந்துபோன தாய், வந்தவாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.

தலைமறைவு குற்றவாளி கைது
விசாரணையின்பேரில், கொடநல்லூர் கிராமத்தில் வசித்து வரும் மதியரசன் (20) என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் மாணவியிடம் நட்பாக பேசிபழகி,பின் திருமண ஆசை காண்பித்து அத்துமீறியது தெரியவந்தது. புகாரை அறிந்த மதியரசன் கடந்த ஒரு மாதமாக தலைமறைவான நிலையில், அவரை நேற்று அதிரடியாக கைது செய்த காவல்துறையினர், போக்ஸோ வழக்கில் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: சீட்டுக்கட்டு விளையாடச் சென்ற இடத்தில் வட்டி கேட்டு தகராறு; ரௌடி கொலை.!
இதையும் படிங்க: சிகிரெட்டுக்கு பற்றவைத்த தீ இளைஞரின் உயிர்பறித்த சோகம்.. போதையிலேயே மூச்சுத்திணறி பிரிந்த உயிர்.!