திருவண்ணாமலை: கூலித்தொழிலாளி வாகனம் மோதி பலி; நொடியில் நேர்ந்த சோகம்.!



in-tiruvannamalai-pallathur-man-dies-an-accident

 

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ் பள்ளத்தூர், கங்காளி குப்பம் கிராமத்தில் வசித்து வருபவர் மாயவன் (வயது 48). இவர் கூலித் தொழிலாளி ஆவார். 

தற்போது, கந்தம்பாளையம், ஆவரங்காடு, புதூர் பகுதியில் தார் சாலி அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே, நேற்று மாலை நேரத்தில், அவர் சாலையை கடக்க முற்பட்டார். 

இதையும் படிங்க: ஆரணி அரசு மருத்துவமனை அலட்சியத்தால் பறிபோன உயிர்.. 8 மாத கைக்குழந்தை, மனைவி பரிதவிப்பு.!

Tiruvannamalai

மர்ம வாகனம் மோதி பலி

அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மாயவன் மீது மோதியதில், அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மாயவன் சடலமாக கிடப்பதை கண்ட உள்ளூர் மக்கள், காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், மாயவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நல்லூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க: இன்ஸ்ட்டா காதலால் அதிர்ச்சி.. 13 வயது சிறுமி கர்ப்பம்.. 22 வயது நபர் தலைமறைவு.!