புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
#Big News: ஆம்பூர்: மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் அத்துமீறிய காமக்கொடூரன்; அடித்துக்கொன்ற தகப்பன்..!
மனதளவில் குழந்தையாக இருந்த சிறுமியை பலாத்காரம் செய்த கொடூரனை தந்தை கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.
சடலம் மீட்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி, ராமானூர் ஏரி பகுதியில் 40 வயது நபரின் சடலம் இருப்பதாக காவல் துறையினருக்கு சம்பவத்தன்று தகவல் கிடைத்தது. இந்த தகவலை அறிந்த அதிகாரிகள், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவரின் உடலில் காயங்கள் இருந்ததால், நபர் அடித்துக் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை முன்னெடுக்கப்பட்டது.
இதையும் படிங்க: காவல் நிலையத்துக்கு பின்புறம் அடித்துக்கொலை செய்யப்பட்ட நபர்; தேனியில் பயங்கரம்.!
காவல்துறை விசாரணை
விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வசித்து வரும் மணிகண்டன் என்பது அம்பலமானது. அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்தபோது, அங்கு வந்து சென்ற கார்களின் விபரம் சேகரிக்கப்பட்டு விசாரிக்கப்பட்டது. அதில் பகீர் தகவல் அம்பலமானது.
சிறுமி பலாத்காரம்
கொலை செய்யப்பட்ட மணிகண்டன், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர், அரங்கல்துருகம் பகுதியில் உள்ள முருகன் என்பவரின் கோழிப்பண்ணையில் வேலை செய்து வந்துள்ளார். முருகனுக்கு மனநலம் பாதிக்கப்பட்ட மகளான சிறுமி ஒருவர் இருக்கிறார். கடந்த அக்.24 அன்று முருகன் திருப்பத்தூருக்கு குடும்பத்தோடு சென்றுவிட, இதனை தனக்கு சாதகமாக்கிய முருகன், சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார்.
ஆத்திரத்தில் கொலை
வீட்டிற்கு வந்த தந்தையிடம் மகள் தனக்கு நேர்ந்த கொடுமையை கண்ணீருடன் விவரிக்கவே, ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற முருகன், மகன் நவீன், மருமகன் கமலநாதன் ஆகியோர் சேர்ந்து கட்டையால் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் மணிகண்டன் உயிரிழந்தார். இதனால் அவரின் உடல் பொன்னேரியை அடுத்துள்ள ஏரியில் வீசப்பட்டது அம்பலமானது.
விசாரணையில் உண்மையை அறிந்த காவல்துறையினர் மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: குமரியே அதிர்ந்தது.. எதிர்தரப்பு வக்கீலுடன் சேர்ந்து வழக்கை இழுத்தடித்தவர் கொடூர கொலை., பெட்ரோல் ஊற்றி எரித்த பயங்கரம்..!