புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
வீட்டில் தனியே இருந்த மூதாட்டி மர்ம கொலை; திருப்பத்தூரில் அதிர்ச்சி.!
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்காயம், நரசிங்கபுரம் ஊராட்சி, இராஜபாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் விஸ்வநாத் ராவ் (வயது 82). இவர் இராணுவத்தில் வேலை பார்த்து ஓய்வுபெற்றவர் ஆவார். விஸ்வநாத்தின் மனைவி சந்திராபாய் (வயது 75). தம்பதிகளுக்கு சீனிராவ் (வயது 52), லட்சுமி ராவ் (வயது 47) என மகன், மகள் இருக்கின்றனர்.
லட்சுமி ராவுக்கு திருமணம் முடிந்து குடும்பத்துடன் பெங்களூரில் வசித்து வருகிறார். சீனிராவ் தனது குடும்பத்துடன் இராஜபாளையம் பகுதியிலேயே தங்கி இருக்கிறார். இதனிடையே, கடந்த 2016ம் ஆண்டு விஸ்வநாத் ராவ் உயிரிழந்துவிடவே, தற்போது மூதாட்டி சந்திரா பாய் வீட்டில் தனியே வசிக்கிறார்.
இதையும் படிங்க: கந்து வட்டி தகராறு... கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண்.!! காவல்துறை தீவிர விசாரணை.!!
மூதாட்டி சடலமாக மீட்பு
நேற்று லட்சுமி தனது தாயாருக்கு செல்போனில் தொடர்பும் கொண்டும் எடுக்காத காரணத்தால், அக்கம் பக்கத்தினருக்கு தொடர்பு கொண்டு வீட்டில் பார்க்க கோரப்பட்டுள்ளது. அவர்கள் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, மோட்டோகாட்டியின் முகம், தலை, கழுத்து பகுதியில் இரத்தக்காயம் ஏற்பட்டு சந்திராபாய் சடலமாக இருப்பது அம்பலமானது.
உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைப்பு
பின் இந்த விஷயம் தொடர்பாக மூதாட்டியின் குழந்தைகளுக்கு தகவல் தெரிவித்தவர்கள், காவல்துறையினருக்கும் தொடர்பு கொண்டு விஷயத்தை கூறியுள்ளனர். தகவலை அறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், சந்திரா பாயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மோப்ப நாய், தடவியல் நிபுணர்கள் ஆகியோர்களுக்கு வரவழைக்கப்பட்டனர். பீரோ மட்டும் திறக்கப்பட்டு இருந்த நிலையில், மூதாட்டியின் உடலில் இருந்த நகைகள் அப்படியே இருந்தன. இதனால் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தொடருகிறது.
இதையும் படிங்க: திருச்செந்தூரில் பயங்கரம்... மனைவியிடம் அத்துமீறிய வட மாநில இளைஞர்.!! கல்லால் அடித்தே கொலை செய்த கணவன்.!!