#Breaking: மோசடி வழக்கு; நடிகர் விஷாலின் தங்கை கணவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு.!
திமுக பிரமுகர் மனைவி கொலை வழக்கில் அதிர்ச்சி திருப்பம்; சித்தியின் கையால் சாப்பிட்டு, எமனாக பாய்ந்த இளசுகள்.. பகீர் பின்னணி.!

நிலம் தொடர்பான தகராறு இளைஞர்கள் இருவரை ஆயுதத்தை கையில் எடுக்க வைத்து உயிரையும் பறித்து, அவர்களின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கி இருக்கிறது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கோ. புளியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் திருப்பதி. இவர் திமுக ஊராட்சி மன்ற துணை தலைவர் ஆவார். சொந்தமாக நிலம் வைத்து விவசாயம் செய்து வருகிறார். ரியல் எஸ்டேட் பணியிலும் ஈடுபட்டு வந்துள்ளார். திருப்பதியின் மனைவி வசந்தி. தம்பதியின் மகன், மகள் வெளியூரில் தங்கியிருந்து படித்து வருகிறார்கள்.
இதையும் படிங்க: பாப்பா.. தாத்தா கூட வா லட்டு தாரேன்.. பேத்தி வயதுள்ள சிறுமியிடம் செய்யும் வேலையா இது? போக்ஸோவில் கைது.!
இதனிடையே, சம்பவத்தன்று வீட்டில் திருப்பதி மற்றும் அவரின் மனைவி இரத்த வெள்ளத்தில் கிடந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் வசந்தியின் உயிரிழப்பை உறுதி செய்தனர். திருப்பதி உயிருக்கு போராடியதால், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி செய்யப்பட்டார்.
காவல்துறை விசாரணை
திமுக ஊராட்சி மன்ற துணை தலைவரின் மனைவி கொலை செய்யப்பட்ட விவகாரம் அதிர்வலையை ஏற்படுத்த, காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணையை முன்னெடுத்தனர். விசாரணையில், திருப்பதியின் வீட்டருகே வசித்து வரும் 2 நபர்கள் மீது சந்தேகம் எழுந்தது.
திருப்பதிக்கு கோவிந்தராஜ், முருகன் ஆகிய நபர்களுடன் நிலம் தொடர்பான பிரச்சனையில் முன்விரோதம் இருந்தது தெரியவந்தது. திருப்பதியின் வீட்டு முன்பு இருந்த நிலத்தில் வழி விடுவது தொடர்பாக எழுந்த தகராறில், திருப்பதி நிலத்தை பதிவு செய்ய முற்பட்டு இருக்கிறார்.
நெருங்கிய உறவினர் மகன்கள் கைது
இதனிடையே தான் நிலப்பிரச்சனையில் கொலையும் நடந்து முடிந்துள்ளது. கோவிந்தராஜ், முருகனிடம் விசாரணை நடத்தப்பட்டதில், தொடக்கத்தில் அவர்கள் உண்மையை சொல்லவில்லை. இதனால் பயன்பாட்டில் இருந்த செல்போனை ஆய்வு செய்தபோது, பலியான வசந்தியின் அக்கா சாந்தியின் மகன்கள் கவின், ரேணு குமார் ஆகியோரை ஓசூரில் வைத்து கைது செய்தனர்.
வசந்தியின் அக்கா சாந்தி, கணவர், 2 மகன்களுடன் வசித்து வந்துள்ளார். சாந்தியின் கணவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். வசந்தியின் குடும்பத்திற்கு சொந்தமான நிலத்தை பிரிப்பதில் அக்கா-தங்கைக்குள் தகராறு இருந்துள்ளது. அரசியல் பிரமுகரான வசந்தியின் கணவர் திருப்பதி, நிலம் விஷயத்தில் தனது செல்வாக்கை கொண்டு செயல்பட்டுள்ளார். மேலும், சாந்திக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
திட்டம் தீட்டி கொலை வெறியாட்டம்
இந்த விஷயத்தை அறிந்த சாந்தியின் மகன்கள் திருப்பதியை கண்டிக்க, அதனை கேட்கவில்லை. இதனால் கவின் மற்றும் ரேணு குமார் உச்சகட்ட ஆத்திரத்தில் இருந்த நிலையில், திருப்பதிக்கும், பக்கத்து வீட்டில் வசித்து வரும் நபர்களுக்கும் இடையே நடைபாதை விடுவது தொடர்பாக பிரச்சனை இருந்தது தெரியவந்தது.
இதனை தங்களுக்கு சாதகமாக்கிய இருவரும், சம்பவத்தன்று வசந்தியின் வீட்டிற்கு சென்று சாப்பிட்டுள்ளார். பின் இருவரையும் கொலை செய்யும் நோக்கி அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். கொலை சம்பவத்தில் வசந்தி உயிரிழந்துவிட, திருப்பதி உயிருக்கு போராடி வருகிறார்.
இதையும் படிங்க: காவலருக்கே இந்த நிலைமையா? பெண் காவலரின் 11 சவரன் தாலி சங்கிலி பறிப்பு; வாகனத்தில் செல்லும்போதே பகீர்..!