BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
சுங்க கட்டண பாஸ் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில்; ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு...!
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் பேருந்துகளுக்கு பாஸ் வழங்குவதில் மாத கட்டண முறையில் 50 முறை தான் பயணிக்க வேண்டும் என கட்டுப்படுத்த கூடாது என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் எத்தனை முறை பேருந்துகள் சுங்கச்சாவடியை கடந்து செல்கின்றதோ, அதற்கு தகுந்தார் போல் மாதாந்திர சலுகை கட்டண பாஸ் வழங்க வேண்டும், என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரை, விருதுநகர், திருச்சி, தனியார் பேருந்து உரிமையாளர்கள் நல சங்கம் தொடர்ந்த வழக்கில், உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும் மதுரை மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் நல சங்க செயலாளர், இந்த வழக்கை மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்து இருந்தார்.
மேலும் அதில் சாலைகள் முறையாக பராமரிக்க வேண்டும் என்றும், சுங்கச்சாவடிகள் அவற்றை உறுதிப்படுத்த வேண்டும் என்றும், மேலும் மாத கட்டண சலுகை, பாஸ் போன்றவற்றை முறைப்படுத்த வேண்டும், என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, இந்த வழக்கை தொடர்ந்திருந்தனர். இந்த வழக்க விசாரித்த உயர்நீதிமன்றம் இந்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.