புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
மனைவி, 6 வயது மகள் கழுத்தறுத்துக் கொலை., கணவன் நடத்திய படுபயங்கரம்.. அதிர்ந்துபோன கரூர்.!
மனைவி, 6 வயது மகளை கழுத்தறுத்து கொன்ற பயங்கரம் கரூர் நகரை அதிரவைத்துள்ளது.
'தென்காசி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர் செல்வகணபதி. இவர் தற்போது கரூர் மாவட்டம் வெங்கமேடு பகுதியில் தங்கியிருக்கிறார். கடந்த 6 ஆண்டுகளாக வெங்கமேடு பகுதியில் தங்கியிருக்கும் செல்வகணபதி, ஜவுளி ஏற்றுமதி தொழில் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
இதையும் படிங்க: வாட்ஸப்பில் லீக்கான பெண்ணின் வீடியோ; ஆபாச படமெடுத்து பரப்பிய இருவர்.. தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்.!
செல்வகணபதிக்கு திருமணம் முடிந்து கல்பனா என்ற மனைவி இருக்கிறார். தம்பதிகளுக்கு சாரதி பாலா என்ற 6 வயதுடைய மகள் இருக்கிறார். இதனிடையே, மீண்டும் கர்ப்பமான கல்பனா, தற்போது 6 மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.
கழுத்தறுத்து கொலை & தற்கொலை முயற்சி
இந்நிலையில், இன்று காலை நேரத்தில் செல்வகணபதி தனது மனைவி, மகள் ஆகியோரை கழுத்தறுத்து கொலை செய்தவர், பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்று இருக்கிறார். இந்த விஷயம் குறித்து அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலை அறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்த காவல்துறையினர், இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த செல்வகணபதியும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
எதற்காக அவர் மனைவி, மகளை கொலை செய்து தற்கொலைக்கு முயன்றார்? என விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் உண்டாக்கி இருக்கிறது.
இதையும் படிங்க: "என்னையே அடக்க பார்க்கிறாயா.." மனைவி படுகொலை.!! கணவன் தற்கொலை முயற்சி.!!