புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
வாட்ஸப்பில் லீக்கான பெண்ணின் வீடியோ; ஆபாச படமெடுத்து பரப்பிய இருவர்.. தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்.!
இளம்பெண்ணின் அந்தரங்க விடியோவை பரப்பிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரின் அந்தரங்க புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியது. இந்த விஷயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்மணி, தென்காசி சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையும் படிங்க: "என்னையே அடக்க பார்க்கிறாயா.." மனைவி படுகொலை.!! கணவன் தற்கொலை முயற்சி.!!
இருவர் கைது
இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், பெண்ணை ஆபாசமாக படமெடுத்தது ஐந்தாம் கட்டளையைச் சேர்ந்த ஜெயராஜ் (வயது 33) என்பதும், அதனை ஆலங்குளத்தை சேர்ந்த சக்தி அருள் (வயது 28) என்பவர் வாட்சப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் வாயிலாக பரப்பியதும் தெரியவந்தது.
இதனையடுத்து, இருவரையும் கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். இவர்களின் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கொலையில் முடிந்த குழாயடி சண்டை.!! இரும்பு கம்பியால் தாக்கப்பட்ட மூதாட்டி மரணம்.!!