பாஜக நிர்வாகி கைது...51 லட்ச ரூபாய் மோசடி செய்த பாஜக நிர்வாகி கைது.!



in-sivakasi-bjp-executive-arrested-for-fraud-of-51-lakh

சிவகாசி அருகே நிலம் வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கில் பாஜக கட்சி நிர்வாகி கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்த திருத்தங்கல் ஆலாவூரணியைச் சேர்ந்தவர் சத்யராஜ். இவர் விருதுநகர் மேற்கு மாவட்ட  பாரதிய ஜனதா கட்சியின் அரசு தொடர்பு பிரிவு செயலாளராக இருந்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான ஐந்து ஏக்கர் நிலத்தை திருத்தங்கல்லில் பிரபல ஜவுளிக்கடை நடத்தி வரும் ஈஸ்வரன் என்பவருக்கு வாங்கித் தருவதாக கூறி கடந்த ஜூன் மாதம் 10 லட்சம் ரூபாய் முதல் தவணையாக வாங்கி இருக்கிறார்.

tamilnadu

பின்னர் கிரையம் மற்றும் பத்திரப்பதிவு செய்வதாக கூறி இரண்டாவது தவணையாக 41 லட்சம் ரூபாய் வாங்கி இருக்கிறார். ஆனால் சொன்னபடி எதுவும் செய்யவில்லை. ஈஸ்வரன் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டபோது  அவருக்கு கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து ஈஸ்வரன் திருத்தங்கல்  காவல் நிலையத்தில் சத்யராஜுக்கு எதிராக புகார் அளித்தார்.

tamilnadu

இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சத்யராஜை கைது செய்து சிவகாசி குற்றவியல்  நடுவன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். நீதிபதி 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டதன் பேரில் விருதுநகர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார் பாஜக நிர்வாகி சத்யராஜ்.