பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்ததும் திவாகர் வெளியிட்ட அதிர்ச்சி காணொளி...
முன்விரோதத்தில் அதிமுக நிர்வாகி படுகொலை; சிவகங்கையை அதிரவைக்கும் சம்பவம்..!
கோவில் திருவிழா முன்விரோதத்தில் ஏற்பட்ட பிரச்சனையில் இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, நாட்டக்குடி கிராமத்தில் வசிப்பவர் கணேசன் (வயது 70). இவர் அதிமுக கிளை செயலாளராக இருக்கிறார். இதே பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்துகிறார். இன்று அதிகாலை நேரத்தில் கடையை திறக்கச் சென்றபோது, மர்ம நபர் ஒருவர் வெட்டித் தப்பிச் சென்றார்.
இதையும் படிங்க: சிவகங்கை: கை-கால் கட்டிப்போட்டு சிறுமியின் சடலம் மீட்பு.. பலாத்காரம் & கொலை.. 13 வயதில் துயரம்.! தமிழகமே அதிர்ச்சி.!
தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த கணேசன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில், கணேசனை வெட்டிய நபர், இதே கிராமத்தில் வசித்து வரும் பாலு என்ற நபரையும் வெட்டி இருக்கிறார். அவர் தப்பியோடி உயிர்தப்பிவிடவே, கணேசன் சிக்கிக்கொண்டதால் அவர் உயிரிழந்தார்.
உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு
கொலை சம்பவம் குறித்து பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததன்பேரில் நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், கணேசனின் உடலை பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மானாமதுரை காவல் கண்காணிப்பாளர் நிரேஷும் நிகழ்விடத்திற்கு வருகை தந்தார்.
அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அதிமுக நிர்வாகியான கணேசனுக்கு, விநாயகர் கோவிலில் நடந்த கும்பாவிஷேகடத்தில் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 4 நாட்களுக்குள் அடுத்தடுத்து 3 கொலை சம்பவங்கள் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அதிர்ச்சி சம்பவம்: ஒரு தலை காதல் கொடூரம்... கழுத்தறுத்து மாணவி படுகொலை.!! இளைஞர் தற்கொலை.!!