பள்ளியில் ஆசிரியர்கள், மாணவர்கள் தங்களின் கையெழுத்தை தமிழில் போட வேண்டும்... பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தல்..!

பள்ளியில் ஆசிரியர்கள், மாணவர்கள் தங்களின் கையெழுத்தை தமிழில் போட வேண்டும்... பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தல்..!


In school, teachers and students should put their signature in Tamil... School education department instructions..

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தங்களின் கையெழுத்தை தமிழில் போட வேண்டும்,எனப் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. 

சென்னை, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தங்களின் கையெழுத்தை தமிழில் போட வேண்டும், பள்ளி மாணவர்கள் தங்களின் முன்னெழுத்தை தமிழில் எழுத வேண்டும் எனப் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. 

அதேபோல், வருகைப்பதிவேடு போன்ற வற்றில் மாணவர்கள் பெயரை எழுதும்போது முன்னெழுத்தையும் தமிழிலேயே எழுத வேண்டும் எனத் தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அனைத்து பதிவுகளிலும் பெயர்களை தமிழில் எழுதவும் அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு ஆணையை சுட்டிக்காட்டி கல்வி ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.