அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
12 வயது சிறுமி பலாத்காரம்.. அமைதி காத்த தாய்.. சிறுமியின் புகாரால் 3ம் கணவருடன் ஓட்டம்.!
வீட்டில் தனியே இருந்த வளர்ப்பு மகள் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில், சிறுமி கொடுத்த புகாரின் பேரில் சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தையை காவல்துறை தேடுகிறது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் பகுதியில் வசித்து வரும் 40 வயது பெண், தனது 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே இரண்டு திருமணங்கள் நடைபெற்று முடிந்துவிட்ட நிலையில், இரண்டு கணவர்களுடனும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்து இருக்கிறார்.
இதனிடையே, சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் மூன்றாவது திருமணமும் செய்துகொண்டுள்ளார். தம்பதிகள் இருவரும் அப்பகுதியில் கிடைக்கும் வேலைகளை செய்யும் கூலித் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்துள்ளனர்.
இதையும் படிங்க: விறகு சேகரிக்க சென்றபோது சோகம்; முதியவர் காட்டு யானை தாக்கி மரணம்.!
சிறுமி பலாத்காரம்
இதனிடையே, கடந்த பிப்.25 அன்று, 40 வயது பெண்ணின் 3 வது கணவர் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டில் 12 வயது சிறுமி தனியாக இருந்த நிலையில், அவரை பாலியல் பலாத்காரம் செய்தவர், வெளியே சொல்லக்கூடாது என மிரட்டி இருக்கிறார்.
சிறுமி தாய் வந்ததும் நடந்ததை கண்ணீருடன் விவரிக்க, அவரும் இதனை வெளியே சொல்ல வேண்டாம் என கூறியுள்ளார். அதிர்ந்துபோன சிறுமி பள்ளிக்கு சென்று ஆசிரியையிடம் முறையிட, அவர் குழந்தைகள் நலத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
தலைமறைவு
தம்பதி :நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மற்றும் குன்னூர் அனைத்து மகளிர் காவல் துறையினர், சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அதன்பேரில் சிறுமியின் வளர்ப்பு தந்தை, தாய் ஆகியோரின் மீது போக்ஸோயில் வழக்குப்பதிவு செய்தனர். கைது நடவடிக்கையை எப்படியோ தெரிந்துகொண்ட இருவரும் தலைமறைவாகினர். இருஅறையும் அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: "பாலியல் குற்றவாளி சீமானை தப்பவிடாதே" - பெரியார் கழகத்தினர் ஊர் ஊராக போஸ்டர்..!