மிரட்டல் காட்சிகள்.. விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் பட டீசர் இதோ..!
தமிழகமே சோகம்.. தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து தாய், 2 குழந்தைகள் மரணம்..!

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து தாய், 2 மகன்கள் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் நாமக்கல்லில் நடந்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள போதுப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் ரவி குமார். இவரின் மனைவி இந்துமதி (வயது 28). ரவிக்குமார் அரசு கல்லூரியில் வேலை பார்த்து வருகிறார். தம்பதிகளுக்கு யாத்விக் (வயது 3), நிதின் ஆதித்யா (11 மாத குழந்தை) என இரண்டு குழந்தை இருக்கிறார்கள்.
இதையும் படிங்க: டீ குடிக்க மூட்டிய நெருப்பால் விபரீதம்; குடிசை வீடு எரிந்து பெண் மரணம்.!
இவர்களின் வீட்டின் வெளியே 10 அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டி இருக்கிறது. இன்று தொட்டி திறந்த நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, காலை சுமார் 11 மணியளவில், குழந்தைகள் இருவரும் வீட்டின் வெளியே விளையாடியுள்ளனர்.
மூவரும் அடுத்தடுத்து விழுந்தனர்
அப்போது, 11 மாத கைக்குழந்தை தவறி நீருக்குள் விழுந்துவிடவே, அவரை மீட்க உடன் இருந்த யாத்விக்கும் விழுந்துள்ளார். தண்ணீர் தொட்டிக்குள் எதோ விழுவது போல சத்தம் கேட்டு வந்த இந்துமதியும், குழந்தைகளை மீட்க தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து அலறி இருக்கிறார்.
சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் தண்ணீர் தொட்டியின் மீது தென்பட்ட 3 வயது சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுவனின் மரணம் உறுதியான நிலையில், சிறுவனின் தாய் மற்றும் கைக்குழந்தையை தேடியுள்ளனர்.
தாய், 2 மகன்கள் பலி
அப்போதுதான் அவர்களும் தண்ணீர் தொட்டிக்குள் இருப்பது தெரியவந்தது. தாமதமான காரணத்தால், அவர்கள் உயிரிழந்தது நிகழ்விடத்திலேயே உறுதி செய்யப்பட்டது. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். உண்மையில் மூவரும் தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்தாரா? கொலையா? தற்கொலையா? என விசாரணை நடந்து வருகிறது.
இதையும் படிங்க: பக்கத்து வீடு பெண்ணின் மீது பேராசை.. அக்கா ஐஸ்மணியுடன் கைகோர்த்த இன்ஸ்டா இடியட்ஸ் கைது.. நாமக்கல்லில் சம்பவம்.!