மிரட்டல் காட்சிகள்.. விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் பட டீசர் இதோ..!
பக்கத்து வீடு பெண்ணின் மீது பேராசை.. அக்கா ஐஸ்மணியுடன் கைகோர்த்த இன்ஸ்டா இடியட்ஸ் கைது.. நாமக்கல்லில் சம்பவம்.!

அண்டை வீட்டில் வசித்து வரும் பெண்ணின் பணப்புழக்கத்தை நோட்டமிட்டு, அடிவயிற்று எரிச்சலில் அதனை திருடி அபகரிக்கலாம் என நினைத்தால் எந்த மாதிரியான பின்விளைவு வந்து சேரும் என்பதற்கு, இந்த சம்பவம் ஓர் உதாரணமாக அமைந்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம், அன்னை சத்தியா நகர், வீட்டுவசதி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் மல்லிகா. சம்பவத்தன்று இவரின் வீட்டுக்குள் புகுந்த 2 இளைஞர்கள், பெண்ணின் 14 சவரன் நகை மற்றும் ரூ.37 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறித்தனர். மேலும், அவரின் மீது கொதிக்கும் தண்ணீரை வீசினர்.
இதையும் படிங்க: 15 ஆண்டுகளில் 9 குழந்தைகள்.. 10 வது பிரசவத்திற்கு தயாரான நாமக்கல் பெண்..!
இதனால் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், 2 இளைஞர்களை பிடித்து தாக்கி, காவல்துறையினர் வசம் ஒப்படைத்தனர். விசாரணையில், இரண்டு இளைஞர்களுக்கும், மல்லிகாவின் பக்கத்து வீட்டில் வசித்து வரும் ஐஸ்வர்யா, மணிமேகலை ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
பெண்ணின் பணத்திற்கு பேராசை
அதாவது, மல்லிகா கழுத்தில் எப்போதும் நகைகள் போட்டு, கையில் பணம் என செழிப்புடன் இருந்து வந்துள்ளார். இவர் தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் தனியாக இருக்கும் மல்லிகாவிடம் கொள்ளை முயற்சிக்கு ஐஸ்வர்யா, மணிமேகலை ஆகியோர் திட்டமிட்டுள்ளனர்.
சம்பவத்தன்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு அறிமுகமான தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை சேர்ந்த அப்துல், சாந்த குமார் ஆகியோரை தொடர்பு கொண்டு பள்ளிபாளையம் வரவழைத்தவர்கள், நகை & பணத்தை கொள்ளையடிக்க திட்டம் தீட்டி கொடுத்துள்ளனர்.
இந்த விஷயத்தில் இன்ஸ்டா கொள்ளையர்கள் இருவரும் பெண்ணின் மீது சுடுதண்ணீரை ஊற்றியதால், பெண் அலறி அக்கம் பக்கத்தினர் வந்து சிக்கிக்கொண்டது தெரியவந்தது. இதனையடுத்து, குற்றவாளிகள் 4 பேரையும் கைது செய்த அதிகாரிகள் 14 சவரன் நகை, ரூ.37 ஆயிரம் பறிமுதல் செய்து ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க: கந்துவட்டி தொல்லையால் காதல் திருமணம் செய்த நபர் மனைவி, குழந்தைகளை தவிக்கவிட்டு தற்கொலை; கடிதத்தில் உருக்கமான தகவல்.!