கல்கி 2898 ஏடி படம் குறித்த முக்கிய அப்டேட் கொடுத்த இயக்குனர்; ரசிகர்கள் ஹேப்பி.!
கந்துவட்டி தொல்லையால் காதல் திருமணம் செய்த நபர் மனைவி, குழந்தைகளை தவிக்கவிட்டு தற்கொலை; கடிதத்தில் உருக்கமான தகவல்.!

என் வாழ்க்கையே முடிந்துவிட்டது. என்னைப்போல எந்த குடும்பமும் பாதிக்கக்கூடாது. சின்ன வயத்துல இருந்து கஷ்டப்பட்டு தவிக்கிறேன் என கடிதம் எழுதி வைத்து வெல்டிங் பட்டறை உரிமையாளர் உயிரை மாய்த்துக்கொண்ட ராசிபுரத்தில் நடந்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம், கட்டனாச்சம்பட்டி, அம்மன் நகரில் வசித்து வருபவர் சக்தி என்ற செல்வகுமார் (வயது 33). இவர் வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு செல்வகுமாரும், சௌமியா (வயது 28) என்ற பெண்மணியும் காதலித்து வந்துள்ளனர். பின் திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.
தம்பதிகளின் அன்புக்கு அடையாளமாக திவ்யா (வயது 8), ஹரிஷிதா என்ற 6 மாத பெண் கைக்குழந்தை இருக்கிறது. இவர்கள் ராசிபுரம் - ஆத்தூர் சாலையில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். நேற்று மதியம் வெல்டிங் பட்டறை பகுதியை மூடிவிட்டு செல்வகுமார் வீட்டிற்கு சென்றுள்ளார். பின் தனது தந்தை விஜயகுமாரிடம், ரூ.100 பணம் கொடுத்து சாப்பாடு வாங்கி வர கூறியுள்ளார்.
இதையும் படிங்க: மருத்துவமனை கழிவறையில் வாயில் நுரைதள்ளிய நிலையில் இளைஞர்; அதிர்ச்சி தகவல்.!
தூக்கிட்டு தற்கொலை
வீட்டை வெளியே பூட்டிவிட்டு செல்லுமாறும் கூறவே, சாப்பாடு வாங்கிய விஜயகுமார் மீண்டும் வீட்டிற்கு வந்தபோது செல்வகுமார் சேலையில் தூக்கிட்டு தொங்குவதைக்கண்டு அதிர்ச்சியடைந்தார். பின் இதுகுறித்து ராசிபுரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் செல்வகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடன் தொல்லை
வீட்டில் அதிகாரிகள் சோதனை செய்தபோது, செல்வகுமார் தனது மனைவி சௌமியாவுக்கு எழுதிய உருக்கமான கடிதம் கைப்பற்றப்பட்டது. அந்த கடிதத்தில், "நான் எனது சிறுவயதில் இருந்து மிகுந்த கஷ்டத்திற்கு உள்ளாகி இருக்கிறேன். மிகவும் கஷ்டமாக உள்ளது. நான் செய்யும் வேலைக்கும், யாரும் சரிவர பணம் தருவதில்லை. 2 பிள்ளைகளை நீ நல்லபடியாக பார்த்துக்கொள். அவங்களை அடிக்க வேண்டாம், எல்லாம் மாறிவிடும்.
வட்டிக்கு மேல் அசல் செலுத்தியும் சோகம்
கடந்த ஒரு வாரமாக நான் உறங்கவில்லை. வி. நகரில் வசித்து வரும் நபரிடம், வட்டிக்கு ரூ.10 இலட்சம் கடன் வாங்கி இருக்கிறேன். அவர் என்னிடம் காசோலை வாங்கி பிளாக் மெயில் செய்கிறார். 10 நாள் வட்டி கொடு என கேட்டு மிரட்டுகிறார். நான் எவ்வுளவுதான் பணம் கொடுக்க முடியும்?. என்னை தொந்தரவு செய்கிறார்கள். என்னுடைய வாழ்க்கை முடிந்துவிட்டது.
குழந்தைகளை பார்த்துக்கோ
சிலரிடம் சீட்டுப்பணம் போட்டுள்ளேன். அந்த பணமும் கிடைக்கவில்லை. என் வாழ்க்கையில் சௌமியா உனக்கு என நான் எதுவுமே செய்யவில்லை. குழந்தைகளை பார்த்துக்கொள், அழ வேண்டாம். வட்டி கட்ட ஒரு வாரம் உறங்காமல் வட்டி கட்டிவிட்டேன். வட்டி விபரம் ஜிபெ, போன் பெவில் இருக்கிறது. அதில் எவ்வுளவு பணம் கொடுத்துள்ளேன் என தெரியும். எனது சாவுக்கு அவர் தான் காரணம். வி. நகரை சேர்ந்தவரிடம் எனது காசு உள்ளது. எனது குடும்பத்தை முரளி, விக்னேஷ் எனக்காக காப்பாற்றுங்கள். உங்களையும் விட்டு நான் செல்கிறேன். வாங்கிய கடனுக்கு மேல் வட்டியை கொடுத்துவிட்டேன். என்னைப்போல வேறெந்த குடும்பமும் பாதிக்கக்கூடாது. எனக்கு கீழ் உள்ளவர்கள் இவ்வுளவு பணம் தர வேண்டும் என எழுதி இருக்கிறார். இந்த விஷயம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: தலைமை ஆசிரியரே மிரளும் விடுதி.. மாணவர் விடுதி வளாகத்துக்குள் பகீர்.. பெற்றோர் பரபரப்பு பேட்டி.!