கொசுக்கடியால் அவதியா?!.. கவலைப்பட வேண்டாம் நாங்கள் இருக்கிறோம்: சென்னை மேயர் அதிரடி..!



In low-lying areas, near water bodies and along roads, mosquito nets are being provided

தாழ்வான பகுதிகளில், நீர்நிலைகளின் அருகில் மற்றும் சாலையோரம் வசிப்பவர்களை கண்டறிந்து கொசு வலை வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்துவருவதால், பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், பொது மக்களை கொசுகடியில் இருந்து பாதுகாக்கும் வகையில், இரண்டு லட்சம் கொசு வலைகள் பொது மக்களுக்கு வழங்க தயார் நிலையில் இருப்பதாக சென்னை மேயர் பிரியா ராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில், நேற்று திரு.வி.க நகர் மண்டலத்தில் அமைச்சர் சேகர் பாபுவும், சென்னை மேயர் பிரியா ராஜனும் ஆய்வு மேற்கொண்டனர். அப்பகுதியில் மழைநீர் வெளியேற்றும் பணிகளையும், தூய்மை பணிகளையும் ஆய்வு செய்தனர். 

அப்போது, பேசிய சென்னை மேயர் பிரியா ராஜன் தமிழகத்தில் தற்போது கன மழை பெய்துவரும் நிலையில், கொசுகடியில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில், இரண்டு லட்சம் கொசு வலைகள் வழங்க தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்தார்.