BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
உறக்கத்தால் நேர்ந்த சோகம்.. லாரி ஓட்டுநர் பரிதாப பலி., 25 அடி ஆற்றில் தலைகுப்புற வாகனம்.!
25 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து ஓட்டுநர் மரணித்த சோகம் நடந்துள்ளது.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் வசித்து வருபவர் அன்வர் கான் (வயது 46). இவர் விடி டிரான்ஸ்போர்ட் பார்சல் சர்விஸ் நிறுவனத்தில், கண்டைனர் லாரி ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார்.
கடந்த பிப்.26 அன்று, மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து பார்சலை ஏற்றிக்கொண்டு, சென்னை நோக்கி பயணம் செய்தார். லாரி திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்றம்பள்ளி, ஏழரைப்பட்டி பகுதியில் வந்தது.
இதையும் படிங்க: காவலரின் வாகனத்தில் அரசுப்பேருந்து மோதி சோகம்; திருச்சியில் துயரம்.. ஆயுதப்படை காவலர் பலி.!

விபத்தில் சிக்கி சோகம்
அதிகாலை சுமார் 5 மணியளவில், ஓட்டுநர் தூக்கத்தில் இருந்துள்ளார். அப்போது, பாலாற்றின் கால்வாய் பாலம் மீது வாகனம் மோதி, 25 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
விபத்தில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய அன்வர் கான், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக சில நிமிடங்களில் உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து நாட்றம்பள்ளி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதிக்கு, மரக்கிளையில் காத்திருந்த எமன்; நொடியில் சோகம்.!