மழலை மொழியில் அங்கன்வாடியில் பிரியாணி கேட்டு கோரிக்கை; அமைச்சரின் அசத்தல் பதில்.!

இந்தியாவில் அனைவர்க்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்ற விஷயத்தில், ஒவ்வொரு மாநில அரசும் உறுதியாக இருக்கிறது. மாணவ-மாணவிகளுக்கு அடிப்படையில் இருந்து கல்வி கிடைக்க வழிவகை செய்யும் பொருட்டு காலை, மதியம் என உணவுத்திட்டங்களையும் அறிமுகம் செய்கிறது.
சத்துணவு
கல்வியில் முன்னோடி மாநிலமாக இந்தியாவில் விளங்கும் கேரளாவில், அரசின் சார்பில் பள்ளியில் படிக்க வரும் மாணவ - மாணவிகளுக்கு உணவுகளும் வழங்கபடுகிறது. அங்கன்வாடியில் பயிலும் மழலைகளுக்கும் சத்துணவு வழங்கப்படுகிறது.
A viral video of a #Kerala child, Shanku, requesting #biryani and chicken fry instead of upma at his anganwadi prompted Minister #VeenaGeorge to announce a meal menu revision, ensuring children's preferences are considered in nutrition plans at childcare centres.#DTNext #Kerala pic.twitter.com/fqs6LxesIv
— DT Next (@dt_next) February 4, 2025
இதையும் படிங்க: நண்பனின் மனைவியை மயக்கி நிர்வாண படங்கள் வாங்கி மிரட்டல்; இளைஞர் அதிர்ச்சி செயல்.!
பரிசீலனை
இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த சிறுவன் சங்கு என்பவன், அங்கன்வாடியில் உப்புமாவுக்கு பதிலாக சிக்கன் பிரியாணி, பொரித்த கோழி வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வந்தது. இந்த வீடியோ அம்மாநில சுகாதாரம் & பெண்கள் நலத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், சிறுவனின் கோரிக்கையை பரிசீலனை செய்வதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சறுக்கல் விளையாட்டில் சோகம்.. சிறுமியின் விரல் துண்டானது.. பராமரிப்பில்லாத பூங்காவில் துயரம்.!