சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை! அதிர்ச்சியில் ரசிகர்கள்...!
செல்போன் மாயமான தகராறில் பயங்கரம்; தொழிலாளி கழுத்தறுத்து கொலை.!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் பகுதியில், வெளிமாநிலத்தை சேர்ந்த நபர்களும் தங்கியிருந்து மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். சிலர் அங்கேயே தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.
இதனிடையே, ஜாய் என்பவரின் விசைப்படகில் ஒடிசா மற்றும் உத்திரப்பிரதேசம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் தங்கியிருந்து மீன் பிடித்து வருகின்றனர். குமரியில் உள்ள கருங்கல் பகுதியில் வசித்து வருபவர் அஜின்.

கழுத்தறுத்து கொல்லப்பட்ட பயங்கரம்;
இவரும் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் நிலையில், அவரது ஸ்மார்ட்போன் மாயமானதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக போதையில் தகராறு ஏற்படவே, ஒடிஷாவைச் சேர்ந்த சிவா என்பவர் கழுத்தறுத்து கொல்லப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: 17 வயது பள்ளி மாணவி கூட்டுப்பாலியல் வன்கொடுமை.. அண்ணா பல்கலை.,யை மிஞ்சும் கொடூரம்.. குமரியில் அதிர்ச்சி.!
இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், சிவாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள அதிகாரிகள், விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பையில் இருந்த மர்மம்.. விடாமல் துரத்திய நாய்.. கன்னியாகுமரியில் பகிர் சம்பவம்.!