பகுதி நேர வருமானமாக கஞ்சா பயிரிட்டு விற்பனை: 18 வயது கல்லூரி மாணவர் கைது.!



in-dindigul-kodaikanal-youth-cannabis-sales

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் பகுதியில் வசித்து வருபவர் தினகரன் (வயது 18). இவர் தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் பகுதியில் செயல்பட்டு வரும் கல்லூரியில் பயின்று வருகிறார். 

வார விடுமுறையின்போது சொந்த ஊருக்கு வரும் தினகரன், கொடைக்கானல் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் விடுதியில் வேலையும் பார்த்து வந்துள்ளார்.

இதையும் படிங்க: திண்டுக்கல்: கழன்று ஓடிய சக்கரம்.. தறிகெட்டு பாய்ந்த கார்.. 2 பேர் பலி., 3 குழந்தைகள் உட்பட 7 பேர் படுகாயம்.!

Dindigul

கஞ்சா விற்பனை செய்து வருமானம்

இதனிடையே, தனியார் விடுதியின் பின்புறத்தில் உள்ள இடத்தில், அவர் கஞ்சா செடிகளை பயிரிட்டு வளர்த்து, அதனை விற்பனை செய்து பகுதி நேரமாக வருமானம் பார்த்தது அம்பலமானது.

Dindigul

வாகன சோதனையின்போது இளைஞரை சந்தேகத்தின் பேரில் நிறுத்திய காவலர்கள், சோதனை செய்தபோது கஞ்சா வைத்திருந்தது அம்பமானது. அதனைத்தொடர்ந்து, இளைஞர் கைது செய்யப்பட்டார். 

விசாரணையில், மேற்கூறிய அதிர்ச்சி தகவல் அம்பலமானது. 

இதையும் படிங்க: ஐ லவ் யு சொல்ல தைரியம் இருக்கா? சிறுமியை ட்ரிக்கர் செய்து வீடியோ; 23 வயது இளைஞர் போக்ஸோவில் கைது..!