கடலூரில், பெண்ணுக்காக; நண்பரை வெட்டி கொலை செய்த பகீர் சம்பவம்...!
கடலூரில், பெண்ணுக்காக; நண்பரை வெட்டி கொலை செய்த பகீர் சம்பவம்...!

நண்பரின் காதலியை அடைய ஆசைப்பட்டதால் வாலிபர் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் அருகே உள்ள ஈச்சங்காடு, மேட்டுத்தெருவில் வசித்து வருபவர் பழனி. அவரது மகன் கிருஷ்ணமூர்த்தி (26). கடலூர் சிப்காட்டில் உள்ள தொழிற்சாலையில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று அதிகாலை அவரது வீட்டிற்கு வெளியே சரமாரியாக கத்தியால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து பக்கத்தில் இருந்தவர்கள், கடலூர் புதுநகர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் நடந்த இடத்தில் தடையவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து, அந்த பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் மகன் குமரேசன் (28) என்பவரை விசாரித்தனர்.
விசாரணையில், குமரேசன் கிருஷ்ணமூர்த்தியை கொலை செய்து ஒப்புக்கொண்டார். பின்னர் குமரேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது குறித்து காவல்துறையினர் கூறியதாவது;-
குமரேசனும் கிருஷ்ணமூர்த்தியும் நண்பர்கள். குமரேசனுக்கு திருமணமாகி குழந்தை உள்ள நிலையில் பண்ருட்டியில் உள்ள குமரேசனின் உறவினர் பெண்ணுடன் அவருக்கு பழக்கம் இருந்துள்ளது. அடிக்கடி அந்த பெண்ணுடன் தனிமையில் இருந்து வந்துள்ளார்.
இதை அறிந்த கிருஷ்ணமூர்த்திக்கும் அந்த பெண் மீது ஆசை ஏற்பட்டுள்ளது. அதற்கு குமரேசன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் உனது மனைவியிடம் சொல்லிவிடுவேன், என குமரேசனை கிருஷ்ணமூர்த்தி மிரட்டியுள்ளார்.
நேத்து முன்தினம் கிருஷ்ணமூர்த்தி வீட்டில், இரண்டு பேரும் மது அருந்தி உள்ளனர். அப்போது கிருஷ்ணமூர்த்தி குமரேசனிடம் அந்த பெண்ணுடன் தனிமையில் இருக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கிருஷ்ணமூர்த்தியை குமரேசன் கத்தியால் வெட்டி கொலை செய்துள்ளார், என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.