தேர்வு பயம் அச்சம்.. 14 வது மாடியில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை.. சென்னையில் சோகம்.!



in Chennai 12th Class Student Dies 

 

சென்னையில் உள்ள முகப்பேர் கிழக்கு பகுதியில் வசித்து வருபவர் நிக்கோல் ஆண்டனி (வயது 19). இவர் கடந்த ஆண்டு பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்து இருக்கிறார். இதனால் விரக்தியடைந்த ஆண்டனி, மறுதேர்வு எழுத தேவையான முயற்சிகளை முன்னெடுத்து இருக்கிறார்.

இந்த தேர்வில் எப்படியேனும் அதிக மதிப்பெண் பெற வேண்டும், அதற்கு அதிகம் படிக்க வேண்டும் என பெற்றோர் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து இருந்த ஆண்டனிக்கு, நேற்று முன்தினம் காலை மறுதேர்வு நடத்தப்படவிருந்தது. அதிகாலை சுமார் 3 மணிக்கே மகனை எழுப்பிவிட்டு பெற்றோர், படிக்குமாறு அறிவுறுத்தி இருக்கின்றனர். 

இதையும் படிங்க: ரூ.150 கோடி மதிப்புள்ள 90 ஏக்கர் நிலம்; முதல்வர் பிறப்பித்த உத்தரவு., துணை முதல்வர் அறிவிப்பு.!

chennai

தற்கொலை

இதனால் மனரீதியாக உடைந்துபோன ஆண்டனி, தேர்வுக்கு சரிவர தயாராகவில்லை என வருந்தி தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தார். தனது இருசக்கர வாகனத்தில் வீட்டில் இருந்து வெளியேறியவர், நொளம்பூர் சர்விஸ் சாலையில் வந்தபோது, உயரமான அடுக்குமாடி குடியிருப்பின் 14 வது மாடிக்குச் சென்று இருக்கிறார். 

அங்கிருந்து கீழே விழுந்தவர் தற்கொலை செய்துகொண்டு உயிரை மாய்த்தார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த நொளம்பூர் காவல்துறையினர், ஆண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க: மத்திய அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி; பாஜக பிரமுகருக்கு சென்னை காவல்துறை வலைவீச்சு.!