தமிழகம்

சீட்பெல்ட் அணியவில்லையென்றால் என்ன நடக்கும்! நிச்சயம் பார்க்க வேண்டிய வீடியோ

Summary:

Importance of seatbelt tik tok video

காரில் செல்லும் போது சீட் பெல்ட் கட்டாயம் போட வேண்டும் என்று ஆங்காங்கே விளம்பரம் செய்யப்படுவதையும் பதாகைகளில் குறிப்பிடப்பட்டுள்ளதையும் நாம் நாள்தோறும் காண்கிறோம். 

ஆனாலும் நம்மில் பலர் கார்களில் பயணம் செய்யும் பொழுது சீட் பெல்ட் அணியாமல் அலட்சியமாகவே பயணம் செய்கிறோம். சீட் பெல்ட் அணிவதால் ஏற்படும் நண்மைகள் பற்றி நாம் தரிந்துகொள்வதில்லை.

எதிர்பாராதவிதமாக நாம் செல்லும் கார் விபத்தில் சிக்கினால் நாம் காரை விட்டு வெளியே பறந்து சென்று பலத்த காயங்களுடன் அடிபடுவோம். அதே சமயத்தில் சீட்பெல்ட் அணிந்திருந்தால் வெளியில் எங்கும் பறந்து விடாமல் காரின் உள்ளேயே சிறிய காயங்களுடன் தப்பிப்போம். 

இதை வாயால் சொன்னால் யாரும் கேட்பதில்லை என்பதால் திருநெல்வேலி உதவி கமிஷனர் சரவணன் ஒரு டிக் டாக் வீடியோவை உருவாக்கி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். உண்மையை உணர்த்தும் இந்த வீடியோவை அனைவரும் நிச்சயம் பார்க்க வேண்டும். 


Advertisement