துரோகம்... நண்பனின் மனைவியுடன் உல்லாசம்... கள்ளக்காதல் ஜோடிக்கு நேர்ந்த துயர முடிவு.!!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக 2 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த காவல் துறையினர் தற்கொலை சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்
கிருஷ்ணகிரி மாவட்டம் குறிஞ்சிகங்கைபுரம் கிராமத்தைச் சேர்ந்த திலகவதி(24) என்பவருக்கும் ஊத்தங்கரை பகுதியை அடுத்த வண்ணாம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் (26) என்ற நபருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 1 வயதில் குழந்தை ஒன்று உள்ளது. கனரக வாகன ஆப்பரேட்டராக பணியாற்றி வரும் சக்திவேல் தனது பணி நிமித்தமாக டெல்லி சென்றார்.
நண்பனின் மனைவியுடன் கள்ளக்காதல்
தான் ஊரில் இல்லாத நேரத்தில் தனது குடும்பத்திற்கு உதவ வேண்டும் என தனது நண்பனா ஹரிஷ் என்பவரிடம் கேட்டுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து சக்திவேலின் நண்பரான ஹரிஷ் சக்திவேலின் மனைவி திலகவதிக்கு தேவையான உதவிகளை செய்து வந்திருக்கிறார். ஹரிஷ் மற்றும் திலகவதி இடையே இதனால் பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறி இருக்கிறது.
இதையும் படிங்க: சொத்துக்காக இப்படியா? தந்தை, தங்கை கொடூரமாக கொலை.. கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி.!
மனைவியுடன் தகராறு சக்திவேல்
தனது மனைவியை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்ற போது அவரது மனைவியான திலகவதியின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் சந்தேகம் அடைந்த சக்திவேல் தனது மனைவிக்கு தெரியாமல் டெல்லியில் இருந்து ஊருக்கு வந்திருக்கிறார். மேலும் சக்திவேல் தனது வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவரது நண்பரான ஹரிஷ் மற்றும் மனைவி திலகவதி ஆகியோர் கட்டிலில் தனிமையில் இருந்திருக்கின்றனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சக்திவேல் தனது மனைவியை கண்டித்ததோடு அவரது பெற்றோரை அழைத்து திலகவதியை தங்களது வீட்டில் 3 மாதங்கள் வைத்திருக்குமாறு கூறியிருக்கிறார்.
தற்கொலை செய்து கொண்ட கள்ளக்காதல் ஜோடி
இதனைத் தொடர்ந்து திலகவதியின் பெற்றோர் அவரை தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். பெற்றோர் வீட்டிற்கு சென்ற திலகவதி திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் திலகவதி தற்கொலை செய்து கொண்டதை அறிந்த அவரது கள்ளக்காதலன் ஹரிசும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை கைப்பற்றிய காவல் துறையினர் ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தற்கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க: #Breaking: கிருஷ்ணகிரி தனியார் பள்ளி மாணவி பலாத்கார விவகாரம்; தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு.!