13 ஆண்டு காதல்.. ஒரு வழியாக திருமணத்தை முடித்த விஜய் டிவி பிரபல நடிகர்.! குவியும் வாழ்த்துக்கள்!!
சொத்துக்காக இப்படியா? தந்தை, தங்கை கொடூரமாக கொலை.. கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி.!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை, கொட்டுக்காரன்பட்டியில் வசிப்பவர் வரதன் (80), விவசாயி. இவருக்கு லவகிருஷ்ணன், கணேசன், கிருஷ்ணன் என 3 மகன்களும், மனவல்லி, மங்கம்மாள் என 2 மகள்களும் இருக்கின்றனர். கிருஷ்ணன் 10 ஆண்டுகளுக்கு முன் இயற்கை எய்தவே, அவருக்கு மணமாகி மனைவி, மகள், மகன் இருந்துள்ளார்.
மனவள்ளி தனது கணவரை பிரிந்து தந்தையின் வீட்டிலேயே வசித்து வருகிறார். இதனிடையே, மூன்றாம்பட்டி கிராமத்தில், தனது தந்தையின் பெயரில் இருக்கும் சொத்தில் பங்கு கேட்டு ஊத்தங்கரை நீதிமன்றத்தில் மனவள்ளி தொடுத்த வழக்கில், அவருக்கு சொத்தை பிரித்து கொடுப்பதாக வரதன் ஒப்புக்கொண்டார். லவகிருஷ்ணனும் தனது தந்தையிடம் சொத்தை பிரித்து கேட்டு இருக்கிறார்.
இதையும் படிங்க: 60 வயதில் தேவையா இதெல்லாம்?.. திருமணமான பெண்ணுடன் கள்ளக்காதல்; கிழவனின் கதைமுடித்த கணவன்.!
இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழப்பு
இதனிடையே, வியாழக்கிழமை வரதன் மகள் மாணவல்லிக்கு நிலம் தொடர்பான சான்று பெற மூன்றாம்பட்டி கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வந்துள்ளார். இதனை அறிந்த லவகிருஷ்ணன் தந்தை, தங்கையிடம் வாக்குவாதம் செய்துள்ளார். ஒருகட்டத்தில் தன்னிடம் இருந்த கொடுவாளை எடுத்து, இருவரையும் சரமாரியாக வெட்டி இருக்கிறார்.
இதனால் இருவரும் இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர். தகவல் அறிந்த போலீசார், நேரில் வந்து இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேற்படி சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிந்து, லவகிருஷ்ணனை கைது செய்தனர்.
இதையும் படிங்க: கள்ளக்காதலுக்கு இடையூறு.. 4 வயது குழந்தைக்கு தாய் செய்த கொடுமை.. பரிதாப பலி.!