ஆசையாக அழைத்து பேன்டீன் ஷாம்பு கொடுத்த வைரமுத்து - புயலை கிளப்பிய பாடகி சுசித்ரா.!
கள்ளக் காதலியை கொலை செய்துவிட்டு கள்ளக்காதலன் எடுத்த விபரீத முடிவு!
சென்னை மயிலாப்பூரில் சேர்ந்தவர் லோகநாயகி. இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் இவருக்கு கிருஷ்ணகுமார் என்பவர் உடன் பழக்கம் ஏற்பட்டது. இந்தப் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இந்த நிலையில் கடந்த மார்ச் 17ஆம் தேதி லோகநாயகி அவரது வீட்டில் கொலை செய்யப்பட்டு உடல் அழுகிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், கள்ளக்காதலன் கிருஷ்ணகுமாரை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உத்திரபிரதேசம் மாநிலம் காசியில் தமிழகத்தை சேர்ந்த ஒருவரின் சடலம் கிடப்பதாக தமிழக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் கள்ளக்காதலியை கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த கிருஷ்ணகுமார் என்பது தெரியவந்தது.
அதன் பின்னர் கோயம்புத்தூரில் உள்ள கிருஷ்ணகுமாரின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்த நிலையில், அவரது உடலை அடையாளம் காண அவரது உறவினர்கள் அங்கு சென்றுள்ளனர். இதில், உயிரிழந்து கிடந்தது கிருஷ்ணகுமார் தான் என உறவினர்கள் அடையாளம் காட்டியதில் உறுதி செய்யப்பட்டது.