தமிழகம்

கள்ளக்காதலை தட்டிக்கேட்ட மனைவி! கள்ளக்காதல் ஜோடிகள் எடுத்த விபரீத முடிவு!

Summary:

illegal love couples commit suicide

திண்டுக்கல் மாவட்டம் செங்குறிச்சி அருகே திருமலைக்கேணியில் உள்ள முருகன் கோவில் பகுதியில் நேற்று காலை ஒரு ஆண் மற்றும் பெண் இறந்து கிடந்தனர். இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

அவர்கள் உடல்கள் கிடந்த இடத்தில பை ஒன்று இருந்துள்ளது அதனை போலீசார் சோதனை செய்த்தபோது அதில் குடும்ப அட்டை ஒன்று இருந்துள்ளது. அதனை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இறந்த பெண், வித்யா என்பதும், அவருடன் இறந்த நபர் மணி என்பதும் தெரிய வந்தது.

Maalaimalar News: nursing college student suicide in krishnagiri

 மணி சமையல் சிலிண்டர் வினியோகம் செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். மணிக்கும், வித்யாவுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இது குறித்து மணியின் மனைவிக்கு தெரிந்ததால் அவர் போலீசில் புகார் செய்துள்ளார். அதேபோல் வித்யாவின் கணவனும் வித்யாவை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் வெறுப்படைந்த கள்ளக்காதல் ஜோடி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமலைக்கேணி முருகன் கோவிலுக்கு வந்தனர். அங்கு இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement