நாடாளுமன்ற ராஜ்யசபா எம்.பி.யாக இசைஞானி இளையராஜா.! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து.!

நாடாளுமன்ற ராஜ்யசபா எம்.பி.யாக இசைஞானி இளையராஜா.! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து.!



ilayaraja nominated to rajya sabha MP

கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, சட்டம், சமூக சேவை உள்ளிட்ட துறைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்களுக்கு மாநிலங்களவையின் நியமன எம்.பி. பதவியை வழங்கி மத்திய அரசு கவுரவித்து வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தை சேர்ந்த இசைஞானி இளையராஜாவை மாநிலங்களவை எம்.பி.யாக மத்திய அரசு நியமித்துள்ளது. இசைத்துறையில் அவர் செய்த அளவிட முடியாத சாதனைகளை அங்கீகரித்து கவுரவிக்கும் வகையில் இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இளையராஜாவுக்கு மாநிலங்களவை நியமன பதவி வழங்கியிருப்பதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், "இசையால் நம் உள்ளங்களையும் மாநிலங்களையும் ஆண்ட 'இசைஞானி' இளையராஜா அவர்கள் நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினராய்ச் சிறப்புறச் செயல்பட வாழ்த்துகள்!' என பதிவிட்டுள்ளார்.