அதிமுக-திமுக கூட்டணியிலிருந்து விலகி புதிய கூட்டணி அமைத்த பிரபல கட்சிகள்.! சூடுபிடிக்கும் அரசியல் களம்.!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. தமிழ்நாட்டில் அதிமுக, அமமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் எனப் பல முனை போட்டி நிலவுகிறது.
இதனையடுத்து அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். தேர்தல் நேரத்தில் சில கட்சி நிர்வாகிகள் கட்சி தாவி வருகின்றனர். இந்தநிலையில், அதிமுக கூட்டணியிலிருந்து சரத்குமாரின் அகில இந்திய மக்கள் சமத்துவ மக்கள் கட்சி வெளியேறியதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல் திமுக கூட்டணியிலிருந்து இந்திய ஜனநாயக கட்சி வெளியேறியுள்ளது.
இதனைத்தொடர்ந்து இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்துவும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமாரும் சென்னை வடபழனியில் செய்தியாளர்களை கூட்டாகச் சந்தித்து, தங்கள் கட்சிகள் இணைந்து சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்க உள்ளதாக அறிவித்தனர். தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தவும், தமிழக மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவும் இந்த கூட்டணி பாடுபடும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்திற்க்ம், ரஜினியின் மக்கள் மன்றத்திற்கும் கூட்டணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.