நள்ளிரவு வரை செல்போனில் பேசிய மனைவியால் சந்தேகம்.. சரமாரியாக வெட்டிக் கொன்ற கணவன்..!

நள்ளிரவு வரை செல்போனில் பேசிய மனைவியால் சந்தேகம்.. சரமாரியாக வெட்டிக் கொன்ற கணவன்..!


husbund-killed-wife-due-to-she-speaks-mobile-late-night

நள்ளிரவு நேரம் வரை மனைவி செல்போனில் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த கணவர் மனைவியை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார்.

சென்னையில் பெரம்பூர் அடுத்த புளியந்தோப்பு பி.எஸ். மூர்த்தி நகரை சேர்ந்தவர் முருகன்.  இவர் மனைவி ராஜேஸ்வரி. இவர் எழும்பூர் குழந்தைகள் மருத்துவர் நல மருத்துவமனையில் தற்காலிக பணியாளராக இருந்து  வந்துள்ளார். முருகன் - ராஜேஸ்வரி தம்பதிக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர் . இவர்கள் உறவினர் வீட்டில் இருக்கும் நிலையில் ராஜேஸ்வரி யாரிடமோ நீண்ட  நேரம் செல்போனில் பேசிக் கொண்டிருந்துருக்கிறார்.

சந்தேகம் அடைந்த முருகன் இந்த நேரத்தில் யாருடன் இவ்வளவு நேரம் பேசுகிறாய் என்று கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார். அதை சொல்ல முடியாது என்று ராஜேஸ்வரி சொல்லவும், இதையடுத்து வாக்குவாதம் முற்றியிருக்கிறது. பின்னர்  இந்த வாக்குவாதம்  தகராறு ஆக மாறி இருக்கிறது .அப்போது கட்டுக்கடங்காத ஆத்திரத்தில் இருந்த முருகன் ஆடு, வெட்டும் கத்தியை எடுத்து வந்து சரமாரியாக வெட்டியள்ளார்.

Murder

ராஜேஸ்வரியின் அலரல் சத்தம் கேட்டு பக்கத்திலிருந்தவர்கள்ஒடி வந்து ராஜேஸ்வரியை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.