நான் அப்படித்தான் செய்வேன்!. அடம்பிடித்த மனைவி.! திருமணமான 10 மாதத்தில் கணவன் எடுத்த விபரீத முடிவு.!

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த குருவராஜப்பேட்டையை சேர்ந்த சங்கர் என்பவர் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து புதுமண தம்பதிகள் அப்பகுதியில் வாடகைக்கு வீடு ஒன்று எடுத்து வசித்து வந்துள்ளனர்.
சங்கரின் மனைவி அடிக்கடி செல்போனில் பேசுவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். ஆனால் தனது மனைவி அடிக்கடி போனில் பேசுவதை பிடிக்காத சங்கர் மனைவியை கண்டித்துள்ளார். ஆனால் அவரின் மனைவி, நான் அப்படித்தான் பேசுவேன் என்று கூறியுள்ளார்.
தனது பேச்சை மனைவி கேட்கவில்லையே என்று விரக்தியடைந்த சங்கர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அரக்கோணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமான 10 மாதத்தில் சங்கர் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.