திருமணமான 2 மாதத்தில் காதல் மனைவியை கொலை செய்ய முயன்ற கணவன்! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

திருமணமான 2 மாதத்தில் காதல் மனைவியை கொலை செய்ய முயன்ற கணவன்! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!


husband murder attempt his wife

விழுப்புரம் மாவட்டம், வானூர் பரங்கனியை சேர்ந்தவர் ஜீவா (21),இவர் நைனார்பாளையத்தை சேர்ந்த ராஜேஸ்வரியை காதலித்து கடந்த ஜுன் மாதம் 3ம் தேதி திருமணம் செய்து கொண்டார். இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் திடீரென ராஜேஷ்வரி மண்ணெண்ணய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜேஸ்வரி உடல் முழுவதும் தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில், புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து அவரது கணவர் ஜீவா, அவரது மாமியார் வீட்டிற்கு போன் செய்து, திடீரென்று ராஜேஸ்வரி தீ குளித்துவிட்டாள், அவளை மருத்துவமனையில் அனுமதித்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெண்ணின் குடும்பத்தார் மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர். மேலும் இதுதொடர்பாக காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதால், போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராஜேஷ்வரி அளித்த வாக்குமூலத்தில், இந்த ஊரடங்கு காலத்தில் கணவன் ஜீவா வேலையில்லாமல் இருந்து வந்தார்.

husband and wife

நகை உட்பட எதுவும் இல்லாமல் அவரை திருமணம் செய்து கொண்டதால், ஜீவாவின் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்தினர். இது குறித்து வெளியே சொன்னால் எனது குடும்பத்தினரை கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டினர். இதனால் நான் யாரிடமும் இதைப் பற்றி சொல்லாமல் இருந்தேன்.

அதன் பின் கடந்த 3-ஆம் தேதி இருவருக்கும் மீண்டும் சண்டை வந்ததால், ஆத்திரமடைந்த கணவர் ஜீவா திடீரென்று அங்கிருந்த மண்ணெண்ணய் எடுத்து தன் மீது ஊற்றி தீ வைக்க முயன்றார். நான் அவரிடம் எவ்வளவோ கெஞ்சியும், என் மீது தீயை வைத்துவிட்டார் என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதனையடுத்து போலீசார் ஜீவாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.