மனைவிதானே என உறவுக்கு அழைத்தேன்..! குறட்டைவிட்டு தூங்கினால்..! ஆத்திரமான கணவன் செய்த பதறவைக்கும் சம்பவம்.!

மனைவி உறவுக்கு வர மறுத்ததால் கணவன் மனைவியின் முகத்தில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜோலார்பேட்டையை அடுத்துள்ள குடியனக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சங்கர். டைல்ஸ் ஒட்டும் வேலைபார்த்துவரும் சங்கர் கடந்த 5 வருடங்களுக்கு முன் விமலா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்ட நிலையில் 3 வயதில் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
சங்கர், விமலா இருவருமே ஏற்கனவே தனித்தனியாக திருமணம் செய்து, முதல் திருமணத்தை முறைப்படி விவாகரத்து செய்தவர்கள். இந்நிலையில், இரண்டாவது திருமணம் செய்துகொண்ட இவர்கள் மத்தியில் அட்டிகை கருத்து வேறுபாடு ஏற்படுவதும், இதனால் விமலா கோபித்துக்கொண்டு குழந்தையுடன் அம்மா வீட்டிற்கு செல்வதும் வழக்கமாக நடந்துவந்துள்ளது.
இதேபோல் கடந்த மாதம் விமலா தனது குழந்தையுடன் அம்மா வீட்டிற்கு சென்ற நிலையில், சங்கர் தன் மனைவியை சமாதானம் செய்து அருகிலையே வாடகைக்கு வீடு ஒன்றை எடுத்து அங்கு மனைவி, பிள்ளையுடன் வசித்துவந்துள்ளார்.
இதனிடையே நேற்றுமுன்தினம் சங்கரின் வீடு நீண்ட நேரமாக பூட்டப்பட்டு கிடந்துள்ளது. யாரும் கதவை திறக்கவில்லை, குழந்தையின் அழுகுரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் கதவை திறந்தபோது விமலா முகம் சிதைந்து இரத்த வெள்ளத்தில் இறந்துகிடக்க, சங்கர் தலையில் காயத்துடன் அருகில் மயங்கி கிடந்துள்ளார்.
அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விமலாவின் உடலை மீது பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மயங்கிக்கிடந்த சங்கரை மீட்டு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை வழங்கினார்.
இதனை அடுத்து சங்கர் கண்விழித்ததும் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில், சங்கர் கூறியதை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். கொலைக்கு முதல் நாள் இரவு தன்னுடன் உறவுக்கு வருமாறு சங்கர் மனைவியை அழைத்துள்ளார். அதற்கு விமலா மருத்துள்ளதாக தெரிகிறது. இதனால் கணவன் மனைவி இடையே வாக்குவாதம் முற்றி, சண்டையாக மாறியுள்ளது.
பின்னர் இருவரும் தூங்க சென்றுள்ளன்னர். ஆனால், மனைவி உறவுக்கு வர மறுத்ததை நினைத்து சங்கர் ஆத்திரத்தில் இருந்துள்ளார். அதேநேரம், விமலா குறட்டை விட்டு தூங்கியுள்ளார். இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த சங்கர், வீட்டுக்கு வெளியே கிடந்த பெரிய கல்லை தூக்கிவந்து மனைவியின் முகத்தில் போட்டு கொலை செய்துள்ளார்.
கொலை செய்துவிட்ட பயத்தில் தானும் தற்கொலை செய்துகொள்ள அதே கல்லில் தலையால் முட்டி தற்கொலைக்கு முயன்று மயங்கி விழுந்துள்ளார். இதனை அடுத்து சங்கர் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.