தமிழகம்

அடிக்கடி போனில் பேசிக்கொண்டிருந்த மனைவி! ஆத்திரத்தில் கணவன் செய்த கொடூரம்! பகீர் சம்பவம்!

Summary:

Husband killed wife for talking in phone

கரூர் மாவட்டம் தோகைமலை அருகே வடசேரி காவல்காரன்பட்டி என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் கிராமத்தில் விவசாய வேலைகளை செய்து வருகிறார். இவரது மனைவி கமலா. இவர் திருச்சியில் ஜவுளிக்கடை ஒன்றில் விற்பனையாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கமலா  வேலை விஷயமாக அடிக்கடி பலரிடமும் போனில் பேசி வந்துள்ளார். இதனால் மனைவி மீது சந்தேகமடைந்து கிருஷ்ணமூர்த்தி அவரிடம்  அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார். 

இந்த நிலையில் கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் கமலா வீட்டில் இருந்துள்ளார். மேலும் அப்பொழுதும் அவர் தொடர்ந்து போனில் பேசியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் பிறப்பிக்கப்பட்டு  ஜவுளி கடைகள் இயங்கியுள்ளது. அதனால் கமலா மீண்டும் வேலைக்கு செல்ல எண்ணியுள்ளார். 

ஆனால் கிருஷ்ணமூர்த்தியோ, கமலாவை வேலைக்கு செல்ல வேண்டாம் என தடுத்துள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கிருஷ்ணமூர்த்தி  பக்கத்தில் இருந்த பெட்ரோலை எடுத்து கமலா மீது ஊற்றி பற்ற வைத்துள்ளார்.
இந்நிலையில் கமலா எரிச்சலால் அலறி துடித்துள்ளார். மேலும் அப்பொழுது கிருஷ்ணமூர்த்தி மீதும் சிறிதளவு நெருப்பு பற்றியது.

இந்நிலையில் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி  கமலா உயிரிழந்தார். மேலும் கிருஷ்ணமூர்த்தி லேசான காயங்களுடன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.  இதற்கிடையே கமலாவின் தந்தை, அவரது கணவர் கிருஷ்ணமூர்த்தியின் மீது புகார் அளித்த நிலையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement