தமிழகம்

மனைவியையும் குழந்தைகளையும் உயிருடன் கொளுத்திய கணவன்!. சாகும் நிலையில் அந்த பெண்ணின் கதறல்!.

Summary:

மனைவியையும் குழந்தைகளையும் உயிருடன் கொளுத்திய கணவன்!. சாகும் நிலையில் அந்த பெண்ணின் கதறல்!.

சேலம் மாவட்டம், ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவருக்கு பூமதி என்ற மனைவியும்,இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம்18-ஆம் தேதி அன்று வேலை முடித்து வீட்டுக்கு வந்த கார்த்திக், தன் மனைவிமற்றும் இரண்டு  குழந்தைகள் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துள்ளார்.

அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் தீக்காயமடைந்த மூன்று பேரையும் அருகிலிருக்கும் மருத்துவமனையில் சேர்த்தனர்.அப்போது பூமதியும் அவரின் பெண் குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கார்த்திக்கின் மகன் தீ காயங்களுடன்  உயிருக்குப் போராடி வருகிறான். இதனையடுத்து நடந்த சம்பவத்திற்காக கார்த்திக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பூமதியின் தம்பி  கூறுகையில், கார்த்திக் வேளைக்கு சென்றுவிட்டு, மூன்று மாதம் கழித்து தான் வீட்டுக்கு வருவார். வீட்டுக்கு வரும் போது போதையில் என் அக்கா, குழந்தைகளை கண்மூடித்தனமாக அடித்து துன்புறுத்துவார். அதேபோலத்தான் இந்த சம்பவமும் நடந்துள்ளது.

சம்பவம் அறிந்து மருத்துவமனைக்கு வந்தபோது அக்காவிடம் கேட்டோம் என்ன நடத்தந்து என்று. குடி போதையில் எங்களை அடித்து இவ்வாறு செய்துவிட்டான், மேலும் காவல்துறையினர் கேட்டல் தற்கொலை செய்துகொண்டோம் என கூறு என்று சொல்லி மிரட்டினான்.

இந்த ஒரு முறை மட்டும் என்னை காப்பாற்றுங்க, நான் உங்க கூட வந்துவிடுகிறேன். என கதறி அழுதுள்ளார் பூமதி. அதை வீடியோ எடுத்து வாட்ஸ்அப்பில் போட்ட பின்னர் தான் காவல்துறையினர் அக்காவிடம் விசாரணை நடத்தி அவனை கைது செய்தார்கள்.
 


Advertisement