"பூ வாசம் கூட மாறல அதுக்குள்ள போயிட்டியே..." திருமணமான 3 வாரத்தில் புது மாப்பிள்ளை தற்கொலை.!!
திருவள்ளூர் மாவட்டத்தில் திருமணமாகி 20 நாட்களேயான நிலையில் மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக புது மாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை பகுதியை சேர்ந்த கார்த்திகேயன். இவர் தனியார் பள்ளியில் வேன் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். ஜெயஸ்ரீ என்ற பெண்ணுடன் கடந்த 4ம் தேதி இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் திருமணம் முடிந்து 20 நாட்கள் கூட ஆகாத நிலையில் கடந்த ஒரு வாரமாக புதுமண தம்பதிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி சண்டை நடந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சம்பவம் நடந்த அன்று அதிகாலை 3 மணியளவில் கார்த்திகேயன், தனது மனைவி ஜெயஸ்ரீயை ரூமில் அடைத்து பூட்டிவிட்டு மற்றொரு அறைக்கு சென்று மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.

ஜெயஸ்ரீ ஜன்னல் கதவை திறக்ககூறி நீண்ட நேரமாக கத்தியுள்ளார். இதனால் அருகிலுள்ளவர்கள் உள்ளே வந்து கதவை திறந்துள்ளனர். இந்நிலையில் அவ்வழியாக ரோந்து சென்ற போலீசார் சம்பவம் பற்றியறிந்து மாடிக்கு சென்று பார்த்தபோது கார்த்திகேயன் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இதனைக் கண்டு அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் திருமணமாகி 20 நாட்களிலேயே மாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவத்திற்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: "சாக போறேன் சந்தோசமா"...? ஒரு மெசேஜில் முடிந்த வாழ்க்கை.!! புதுமண தம்பதி எடுத்த சோக முடிவு.!!
மேலும் கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் குறித்தும் காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. திருமணமான மூன்று வாரத்திற்குள் புது மாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இரு வீட்டாரிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க: கல்யாணம் முடிந்த 6 மாதத்தில் சோகம்... நிராகரித்த கணவன்.!! மனைவி எடுத்த விபரீத முடிவு.!!