தமிழகம்

இறப்பிலும் இணைபிரியாத கணவன் மனைவி..! ஊரையே சோகத்தில் விட்டுச்சென்ற சம்பவம்.!

Summary:

Husband dead after his wife dead near Covai

தன் மனைவி இறந்த செய்தி கேட்டு கணவரும் உயிரிழந்த சம்பவம் கோவையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் சுந்தராபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் வசித்து வந்தவர்கள் 74 வயதான மணி மற்றும் 72 வயதான அவரது மனைவி சரோஜினி. திருமணம் முடிந்த நாளிலிருந்து மிகவும் பாசத்துடன் வாழ்ந்து வந்துள்ளனர் இந்த தம்பதியினர்.

இந்நிலையில் சரோஜினி கடந்த 8 வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்த நிலையில், மனைவியை மருத்துவமனையில் வைத்து சிகிச்சை பார்க்காமல் தனது வீட்டிலேயே, தனது கண்ணெதிரே வைத்து கவனித்து வந்துள்ளார் அவரது கணவர் மணி. 

இப்படியே எட்டு வருடங்கள் கடந்து விட்ட நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு மோசமடைந்துள்ளார் சரோஜினி. இதனையடுத்து மணி தனது மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தபோது அவரது மனைவி சரோஜினி வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். 

மனைவி இறந்த செய்தியை கேட்ட மணி வீட்டிலேயே மயங்கி விழுந்துள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மணியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே மாரடைப்பால் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். 

இத்தனை வருடங்களாக தன்னுடன் சேர்ந்து வாழ்ந்த மனைவி இறந்த சோகத்தை தாங்கமுடியாமல் மணியும் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement