தமிழகம்

2 மாதங்களுக்கு ஒரு முறை மட்டும் வீட்டுக்கு வரும் கணவர்.! அடுத்தடுத்து தீக்குளித்த கணவன் மற்றும் மனைவி!

Summary:

husband and wife suicide for money problem

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள அல்லிகுண்டம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராம். 38 வயது நிரம்பிய இவருக்கு கனி என்ற பெண்ணுடன் திருமணமாகி இந்த தம்பதிக்கு ஒரு மகனும்,  மகளும் உள்ளனர். ஜெயராம் சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வந்துள்ளார். அவர் லாரியில் வெளிமாநிலங்களுக்கு சரக்கு ஏற்றி சென்று வருவார். 2 மாதங்களுக்கு ஒரு முறை வீட்டிற்கு வந்து, ஒரு வாரம் தங்கி விட்டு மீண்டும் லாரியை  ஓட்டிச் செல்வதை வழக்கமாக வைத்திருந்துள்ளார்.

இந்த நிலையில் ஜெயராம் வெளிமாநிலத்துக்குச் சென்றிருந்த போது அவரது லாரி பழுதடைந்து விட்டது. அதனை பழுதுபார்க்க போதிய பணம் இல்லாததால் அவரது லாரியை சரி செய்ய முடியாமல்வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு பணம் ஏற்பாடு செய்வதற்காக சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் பணப்பிரச்சனை அதிகமாக இருந்துள்ளது. இதனால் மேலும் மனவேதனை அடைந்துள்ளார் ஜெயராம். இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்களுடன் வெளியே சென்று மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார் ஜெயராம். அப்போது அவருக்கும், அவருடைய மனைவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் இருவரும் கோவத்தில் அடுத்தடுத்து தங்களது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளித்தனர். இதில் வீட்டில் இருந்த அவர்களது பிள்ளைகள் மீதும் தீப்பற்றியது. இதனையடுத்து அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைத்து 4 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஜெயராம் மற்றும் கனி உயிரிழந்தனர். அவர்களது பிள்ளைகள் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement