தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் திடீர் மறைவு.! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!
துக்க வீட்டிற்கு சென்ற கணவன்-மனைவி.! விபத்தில் துடிதுடித்து பரிதாப பலி.!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அடுத்து உள்ள வடக்குப் பொன்னன்விடுதி கிராமத்தை சேர்ந்த ராமு என்பவர் அவரது மனைவி பெரியநாயகியுடன் தஞ்சாவூர் மாவட்டத்தில் அவர்களது உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து மீண்டும் சொந்த ஊருக்கு இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர்.
அவர்கள் இருவரும் கறம்பக்குடி புதுக்குளம் அருகே வந்தபோது, கறம்பக்குடியிலிருந்து பட்டுக்கோட்டை நோக்கி சென்ற வேன் ஒன்று அவர்களது இருசக்கர வாகனம் மீது மோதியது. அதில் கணவன்-மனைவி இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவன்-மனைவி விபத்தில் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.