துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்ற குடும்பத்தினர்.! கார் கவிழ்த்து சம்பவ இடத்திலேயே இருவர் பலி.!

துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்ற குடும்பத்தினர்.! கார் கவிழ்த்து சம்பவ இடத்திலேயே இருவர் பலி.!


husband and wife died in accident

சென்னை, அயனாவரத்தைச் சேர்ந்தவர் ரயில்வே ஊழியரான தியாகேஸ்வரன், அவரது மனைவி ஜெயா, அவர்களது மகன் இமானுவேல் மற்றும் தியாகேஸ்வரனின் மகன் லிபன் ஆகியோர் நாகர்கோவில்லுக்கு ஒரு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து சனிக்கிழமை காரில் சென்றுள்ளனர்.

இதனையடுத்து மறுநாள் ஞாயிற்றுக்கிழமை இரவு நாகர்கோவிலில் இருந்து மீண்டும் சென்னைக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். திங்கள்கிழமை அதிகாலை 2 மணி அளவில் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே ஒலக்கூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது ஒரு லாரி மீது கார் மோதியது. இதனால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் அருகே இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

அங்கு ஏற்பட்ட விபத்தில் காரில் இருந்த தியாகேஸ்வரன் மற்றும் ஜெயா ஆகியோர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியனர். மற்றவர்கள் பலத்த காயத்துடன் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி அனுப்பிவைக்கப்பட்டனர். அங்கு நடந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.