என்ன ஒரு பாச பிணைப்பு பார்த்தீர்களா... கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மறுநாளே மனைவி உயிரிழப்பு!!



husband-and-wife-continuously-died-togather

திருவள்ளூர் மாவட்டத்தில் கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மறுநாளே மனைவி உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் டேனியல் பாலகிருஷ்ணன் - வெண்ணிலா தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் தம்பதியினர் இருவரும் ஓய்வு பெற்ற ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் டேனியல் பாலகிருஷ்ணன் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்துள்ளார். இவரின் இறுதி சடங்கு நிகழ்வுகள் நேற்று நிறைவேற்றப்பட்டது. இறுதி சடங்கிற்கு பிறகு வீட்டிலிருந்த அவரது மனைவி வெண்ணிலா மயங்கி கீழே விழுந்துள்ளார். 

thiruvallur

உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவி இருவருடைய உடலும் அருகே அடக்கம் செய்யப்பட்டது. கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மறுநாளே மனைவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.