
Husband and son affected by the corona, mother heard the news
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள சூரப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவருக்கும் அவரது 12 வயது மகனுக்கும் கொரோனா உறுதியானது. இந்த செய்தியை கேட்ட சிறுவனின் தாய் அதிர்ச்சியில் மயங்கி விழுந்துள்ளார்.
அதன் பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த தகவல் கொரோனா வார்டில் தங்க வைக்கப்பட்டிருக்கும் கணவர் மற்றும் மகனுக்கு தெரியப்படுத்தப்பட்டது.
அந்த செய்தியை கேட்ட இருவரும் மிகுந்த வேதனையில் உள்ளனர். இறந்த தாயின் உடலை பார்க்க வேண்டும் என்று சிறுவன் அழுது புலம்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் இறந்த பெண்ணின் தாயாரும் ஏற்கனவே கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாராம். விவசாய குடும்பத்தில் ஏற்பட்டுள்ள இந்த சோகம் பலரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
Advertisement
Advertisement