அடக்கொடுமையே! போதையில் மனைவி மற்றும் குழந்தையை வெளியே தள்ளி கூலி தொழிலாளி எடுத்த விபரீத முடிவு.!

அடக்கொடுமையே! போதையில் மனைவி மற்றும் குழந்தையை வெளியே தள்ளி கூலி தொழிலாளி எடுத்த விபரீத முடிவு.!


humility-the-tragic-decision-taken-by-the-laborer-who-t

ஆற்காட்டை அடுத்த முப்பதுவெட்டி பகுதியில் சபிர் பாஷா தனது மனைவி மற்றும் குழந்தைகளோடு வசித்து வந்துள்ளார். சபீர் பாஷா வெல்டிங் கடையில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார்.

 இந்நிலையில் சபீர் பாஷா மது போதைக்கு அடிமையாகி தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் சம்பவத்தன்று சபீர் பாஷா வழக்கம் போல் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததால் அவருக்கும்‌ அவரது மனைவிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

Family Dispute

இதனைதொடர்ந்து இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சபீர் பாஷா மிகுந்த கோபமுற்று தன் மனைவி மற்றும் குழந்தைகளை வீட்டை விட்டு வெளியே தள்ளி உள்ளே தாழ்ப்பாள் போட்டுள்ளார். 

இதனையடுத்து சபீர் பஷாவின் மனைவி பல முறை கதவை தட்டியும் அவரது கணவர் திறக்கவில்லை. இதனால் சபீர் பாஷாவின் மனைவி தன் குழந்தைகளோடு அருகில் இருந்த தன் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் மறுநாள் காலை சபீர் பாஷாவின் மனைவி தனது கணவர் வீட்டிற்கு வந்து கதவை நீண்ட நேரம் தட்டி உள்ளார். 

Family Dispute

ஆனால் சபீர் பாஷா கதவை திறக்காததால் அதிர்ந்து போன மனைவி அக்கம் பக்கத்தினர் உதவியோடு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது அங்கு சபீர் பாஷா புடவையால் துக்கிட்டு மின்விசிறியில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். பின்னர் அங்கிருந்தோர் அவரை மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து சபீர் பாஷாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.