கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றிய விவகாரம்: ரத்தம் அளித்த இளைஞர் உயிரிழப்பு!.

கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றிய விவகாரம்: ரத்தம் அளித்த இளைஞர் உயிரிழப்பு!.


hiv blood inserted issues: young boy died

விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் கர்ப்பிணி மனைவியான 23 வயது பெண்ணுக்கு சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் ஏற்றப்பட்ட ரத்தத்தில் எச்ஐவி தொற்று இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் கர்ப்பிணி பெண் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு 9 டாக்டர்கள் அடங்கிய மருத்துவக்குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

hiv issue

மேலும் ரத்தம் செலுத்துவதில் அலட்சியமாக செயல்பட்ட 3 ஊழியர்கள் பணியிலிருந்து அதிரடியாக  நீக்கப்பட்டுள்ளனர். 

இது தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வரும் நிலையில் பெண்ணுக்கு செலுத்தப்பட்ட ரத்தம் சிவகாசி ரத்த வங்கியில் இருந்து பெறப்பட்டது என்பதும், அந்த ரத்தம் கமுதியை சேர்ந்த 19 வயது வாலிபர் தானமாக கொடுத்தது எனவும் தெரியவந்தது.

hiv issue

இந்த நிலையில் மருத்துவ குழுவினரும், போலீசாரும் அவரிடம் விசாரித்தனர். இதனால் அந்த வாலிபர் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.