தமிழகம்

இனி யாரும் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது.! கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தால் அவளோ தான்.! இன்று தாக்கல் ஆகிறது சட்ட மசோதா

Summary:

கோயில் சொத்துக்களை அபகரிப்பவர்களை கைது செய்வதற்கான சட்ட மசோதாவை இந்து சமய அறநிலையத்துறை அம

கோயில் சொத்துக்களை அபகரிப்பவர்களை கைது செய்வதற்கான சட்ட மசோதாவை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார்.

தற்போதுவரை கோயில் நிலங்களை அபகரிப்பவர்கள் மீது சிவில் வழக்குகள் மட்டுமே போட முடியும். கைது நடவடிக்கைகள் எடுக்க முடியாது. இதனால் பல இடங்களில் கோயில் நிலங்களின் ஆக்கிரமிப்பு அதிகமாக நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தால் கைது செய்து ஜாமீனில் விட முடியாத அளவிற்கு சட்ட திருத்தம் செய்யப்பட்டியிருப்பதாகவும், ஏற்கனவே உள்ள சட்டத்தில் கைது செய்வதற்கான வழிவகை இல்லை என்பதால், இந்த திருத்தம் செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தால் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளும் விதமாக சட்ட மசோதா இன்று தாக்கல் ஆகிறது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார். இதனை பொதுமக்கள் அனைவரும் வரவேற்றுள்ளனர்.


Advertisement