தோண்ட தோண்ட வெளிவரும் துப்பு..! செஞ்சி சிறுமி மாயமான நள்ளிரவில்.. 12:45 மணிக்கு அந்த வீட்டின் முன்பு நின்ற மினி வேன்..! சிபிசிஐடி கிடைத்த சிசிடிவியில் சிக்கிய அதிர்ச்சி..!!!



hemalatha-missing-child-cbcid-investigation-villupuram

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 7 வயது சிறுமி ஹேமலதா மாயமான வழக்கில் சிபிசிஐடி போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். சிறுமி காணாமல் போன நள்ளிரவு நேரத்தில் அவரது வீட்டின் வழியாகச் சென்ற வாகனங்கள் குறித்து ஆய்வு செய்த அதிகாரிகள், நடுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வில்லுப்பாட்டுக் கலைஞர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணை வழக்கில் முக்கியத் திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.

நள்ளிரவில் சென்ற வாகனங்கள் குறித்து விசாரணை

செஞ்சி வட்டம் ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வடிவேலு - பவானி தம்பதியின் 7 வயது மகள் ஹேமலதா, கடந்த அக்டோபர் 11-ம் தேதி நள்ளிரவில் மர்மமான முறையில் காணாமல் போனார். பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டு உறங்கச் சென்ற குழந்தை திடீரென மாயமானது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: சிக்கிய துப்பால் வேகமெடுக்கும் விசாரணை..! உளவுத்துறையை களமிறக்கிய விஜய்.. அடுத்தடுத்து உள்ளே புகுந்த OCIU, SBCID...! செஞ்சி சிறுமி வழக்கில் அதிரடித் திருப்பம்...!!!

உள்ளூர் போலீசார் 10 நாட்களாக விசாரணை நடத்தியும் எந்தத் துப்பும் கிடைக்காததால், வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, பழைய குற்றவாளிகள், சாமியார்கள், சுடுகாடுகள் எனப் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும், 14 நேஷனல் பெர்மிட் லாரிகளின் நடமாட்டமும் ஆய்வு செய்யப்பட்டது. நாமக்கல் மற்றும் கடலூர் உளவுத்துறை பிரிவுகளும் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

12.45 மணிக்கு சென்ற மினி வேன்: சிசிடிவியில் பதிவான காட்சி

இதற்கிடையே, சிறுமி காணாமல் போன நேரத்தில் அவரது வீட்டின் முன்பாகச் சென்ற வாகனங்கள் மற்றும் செல்போன் கோபுர சிக்னல்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில், நள்ளிரவு சுமார் 12.45 மணியளவில் அந்த மண் சாலை வழியாக ஒரு டாடா ஏஸ் மினி வேன் மற்றும் சில இருசக்கர வாகனங்கள் சென்றது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்தது.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அந்த வாகனங்கள் பக்கத்து கிராமமான நடுப்பட்டைச் சேர்ந்த வில்லுப்பாட்டுக் கலைஞர்களுடையது என்பது தெரியவந்தது. திருக்கோவிலூர், கண்டாச்சிபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கோவில் நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு, இசைக்கருவிகளுடன் அவர்கள் ஊர் திரும்பியுள்ளனர். அவர்கள் சென்ற நேரமும் சிறுமி மாயமானதாகக் கூறப்படும் நள்ளிரவு 12 மணி முதல் 1 மணி வரையிலான நேரமும் ஒன்றாக இருந்ததால் போலீசாரின் கவனம் அவர்கள் மீது திரும்பியது.

வில்லுப்பாட்டுக் கலைஞர்களிடம் தனித்தனியாக விசாரணை

இதையடுத்து, கூடுதல் எஸ்பி வேல்முருகன் தலைமையிலான சிபிசிஐடி அதிகாரிகள் நடுப்பட்டு வில்லுப்பாட்டுக் குழுவினரை நேரில் அழைத்து விசாரணை நடத்தினர். நள்ளிரவு 12.45 மணியளவில் அந்தச் சாலையைக் கடந்தபோது சிறுமியின் வீட்டின் முன்பு வாகனத்தை நிறுத்தினார்களா, அங்கு சந்தேகத்திற்கிடமான நபர்கள் யாரேனும் இருந்தார்களா, வீட்டின் கதவு திறந்திருந்ததா என்பது உள்ளிட்ட கேள்விகள் எழுப்பப்பட்டன. ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக வாக்குமூலம் பெறப்பட்டது.

சிறுமி மாயமான நேரத்தில் அந்தப் பகுதியில் நடந்த நடமாட்டம் குறித்து கலைஞர்கள் அளிக்கும் தகவல்கள் விசாரணைக்கு உதவக்கூடும் என அதிகாரிகள் கருதுகின்றனர். இருப்பினும், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இதுவரை எந்த முடிவும் வெளியாகவில்லை. ஹேமலதா மாயமானதற்கான காரணத்தையும், அவர் எங்கு இருக்கிறார் என்பதையும் கண்டறிய சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இதையும் படிங்க: 24 நாட்களுக்குப் பின் சிக்கிய சிசிடிவி காட்சிகள்...! செஞ்சி சிறுமி கோவிலில் ... பதறி அடித்துச் சென்ற சிபிசிஐடிக்கு கிடைத்த முக்கிய தடயம்! முழு நம்பிக்கையில் பெற்றோர்..!!!