தமிழகம்

மக்களே உஷார்.! இந்த 10 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!

Summary:

Heavy rain will be come in this 10 district chennai weather report

சென்னை வானிலை ஆய்வு மையம் சற்று முன்பு வெளியிட்ட அறிவிப்பில் தென்மேற்கு பருவக்காற்று ஏற்பட்ட காரணத்தால் மேற்கு தொடர்ச்சி மலைச்சரிவு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் இந்த 10 மாவட்டங்களை சேர்ந்த மக்கள் அனைவரும் உஷாராக இருக்கும் படி எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்மேற்கு பருவகாற்றானது மேற்கு தொடர்ச்சி மலையில் மேலும் தீவிரம் அடைந்துள்ளதால் நீலகிரி மாவட்டத்தின் மலைச்சரிவு பகுதிகளில் பலத்த காற்றுடன் கன மழை பெய்யும் என்றும்,கோவை தேனி உள்ளிட்ட மலைப்பகுதி மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் திருப்பூர், திண்டுக்கல், நெல்லை,தென்காசி,விருதுநகர் தூத்துக்குடி,கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல்
மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


Advertisement